புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 26, 2026 07:38 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், நவகிரகங்களின் நிலையானது மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். மேலும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்! | Mars Transit In Punarpoosam Who Get Huge Luck

சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம்: உச்ச பலனை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம்: உச்ச பலனை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

அந்த வகையில், செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் அதிபதி குரு பகவான்.

செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 3 ராசிக்காரர்களுக்கு குறிப்பாக மங்களகரமாக அமையவுள்ளது.

இவர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழும் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும்  ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்! | Mars Transit In Punarpoosam Who Get Huge Luck

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசியைச் சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கமே மிகவும் சிறப்பாக அமையப் போகிறது.

நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் சாதகமாக முடிவடையும்.

இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கி, நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்ப்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தனுசு

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்! | Mars Transit In Punarpoosam Who Get Huge Luck

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கமே சாதகமாகவும் சிறப்பாகவும் அமையும்.

இந்த காலகட்டத்தில் மன தைரியம் அதிகரிப்பதுடன், எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஆற்றலும் வளரும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.

வேலை செய்பவர்களுக்கு அவர்களின் சிறப்பான செயல்திறன் மற்றும் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இதன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

மிதுனம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்! | Mars Transit In Punarpoosam Who Get Huge Luck

சூரியன் - கேது சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!

சூரியன் - கேது சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, நிதி ரீதியாக இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதோடு, பல்வேறு வழிகளில் இருந்து எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். 

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியையும் சிறப்பாகவும், திட்டமிட்டபடியும் செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்..இதுவரை தாமதமாகி வந்த சில காரியங்களும் சாதகமாக முடிவடையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US