சிம்ம ராசிக்கு இடம்பெயரும் செவ்வாய்: எந்த ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்?
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்குகிறார்.
மேஷம், விருச்சிக ராசிகளின் அதிபதியான இவர், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் பயணிப்பார். தற்போது கடக ராசியில் பயணிக்கும் செவ்வாய், நவம்பர் 12ஆம் தேதி சிம்ம ராசிக்கு இடம்பெயர்கிறார்.சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.

இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்குத் தொழில், வியாபாரம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதுடன், வேலையில் ஆர்வமும் அதிகரிக்கும்.
அப்படி செவ்வாய் சிம்ம ராசிக்கு இடம்பெயர்வதால் தொழில் மற்றும் நிதி ரீதியாகச் சிறப்பான பலன்களைப் பெறப்போகும் ராசிகள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

செவ்வாய் 5-ஆவது வீட்டிற்குச் செல்வதால், மேஷ ராசியினரின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.பணிபுரிபவர்கள் திறமையை வெளிப்படுத்தவும், புதிய பொறுப்புகளைப் பெறவும் வாய்ப்புள்ளது.
வணிகர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம்.வருமானம் அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.நிதி நிலையில் நிச்சயம் குறிப்பிடத்தக்க உயர்வு உண்டு.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் 10-ஆவது வீட்டிற்குச் செல்வதால், தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்டகாலமாக முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும். புதிய வருமான வழிகளும் உருவாகலாம். பணியிடத்தில் பொறுமையுடன் செயல்பட்டு, சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேணுவது சாதகமான பலன்களைத் தரும்.
சிம்மம்

செவ்வாய் முதல் வீட்டிற்குச் செல்வதால், சிம்ம ராசியினரின் தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் கருத்துகளைத் திறம்பட வெளிப்படுத்தி, பணியிடத்தில் முன்னேற வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கலாம்; வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் உருவாகும். இருப்பினும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்போது அவசரப்படாமல் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |