செவ்வாய் பெயர்ச்சி: தொட்டதெல்லாம் வெற்றியாகும் தருணம்... அந்த 3 அதிர்ஷ்ட ராசி யார்?
மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்தெந்த ராசியினருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றிற்கு காரணியாக இருக்கின்றார்.
செவ்வாய் கிரகமானது மேஷம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு அதிபதியாக இருக்கும் நிலையில், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியினை மாற்றுகின்றார்.

இவ்வாறு தனது நிலையினை மாற்றும் போது சில ராசியினருக்கு வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகின்றார்.
ஜுலை மாதம் முழுவதும் ரிஷபத்தில் இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைவார்.
இத்தருணத்தில் சிறப்பாக இருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசியினரின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லும் நிலையில், தன்னம்பிக்கை, ஆளுமை மேம்படுவதுடன், தொழிலில் நல்ல லாபத்தையும், புதிய ஒப்பந்தத்தையும் பெறுவார்கள்.
கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைப்பதுடன், பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம், நிதி ஆதாயம் கிடைப்பதுடன், நீண்ட கால பிரச்சனைகள் அனைத்தும் முடிவிற்கு வருகின்றது.

கன்னி
கன்னி ராசியினரின் 10வது வீட்டில் செவ்வாய் இருக்கும் நிலையில், தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பதுடன், வியாபாரத்தினை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
தன்னம்பிக்கை அதிகரித்து, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவதுடன், பதவி மற்றும் சம்பள உயர்வையும் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடைவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நீடிக்கின்றது.

மகரம்
மகர ராசியில் 6வது வீட்டிற்கு செல்லும் செவ்வாயினால் புதிய பொறுப்பு கிடைப்பதுடன், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளும் முடிவிற்கு வரும்.
கடின உழைப்பிற்கு ஏற்ற பலனும், நிதி நிலைமை வலுவடையும், புதிய வருமான வழிகள் ஏற்படுவதுடன், நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதுடன், ஒவ்வொரு வேலையிலும் வெற்றியும் கிடைக்கின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |