செவ்வாய் ஆதிக்கத்தில் பிறக்கும் 2025... எந்த ராசியினருக்கு பேரதிஷ்டம் காத்திருக்குது தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான வருட ராசிபலன் கணிப்பின் பிரகாரம் வருகின்ற ஆண்டின் கூட்டு எண் என்பது 9 ஆகும். இது செவ்வாய் பகவானை குறிக்கின்றது.
அதனால் 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவானின் ஆதிக்த்தில் பிறக்கவிருக்கின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, தைரியம், நம்பிக்கை ஆகியவற்றின் அதிபதியாக திகழ்கின்றார்.
இந்த செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறார். எனவே அந்த ஆண்டில் செவ்வாயின் ஆசியால் குறிப்பிட்ட சில ராசியினர் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். அவர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முழுவதும் செவ்வாய் பகவானின் முழுமையான ஆசியால் தொட்டதெல்லாம் பொன்னாகும் பேரதிஷ்டம் உண்டாகும்.
குறைந்த முயற்சியிலேயே அதிக லாபத்தை பெறக்கூடிய யோகம் புதிய ஆண்டில் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும்.
இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பல்வேறு வழிகளிலும் வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் கூடிவரும். செவ்வாயின் ஆசியால் நிதி நிலை உயரும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அற்புதமான சாதக பலன்கள் நிறைந்த ஆண்டாக அமையும்.
தொழில் மற்றும் வியாபரத்தில் அசுர வளர்ச்சி உண்டாகும். பணவரவு ஆண்டு முழுவதும் சீராக இருக்கும்.
2025 ஆம் ஆண்டு முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபத்தை பெறக்கூடிய அதிர்ஷ்டத்தை செவ்வாய் பகவான் கொடுப்பார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு செவ்வாயின் ஆசியால், மகிழ்ச்சியும், முன்னேற்றமும் காத்திருக்கின்றது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்மாகும்.
நீண்ட நாள் ஆசைகள் இந்த ஆண்டில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியம் மேம்படும். மனஉறுதி பிறக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |