செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைியில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்பட்டுகின்றது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் தேவர்களின் குருவான குரு பகவானால் இணைவதால், திரிஏகாதச யோகம் உருவாகவுள்ளது.

இதன் தாக்கமானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திகாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை ஏற்படுத்திக்கொடுக்கப்போகின்றது. அப்படி நிதி ரீதியில் உச்ச பலனை அனுபவிக்கப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்க வாய்ப்புள்ளது.
இந்த காலத்தில் தங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பண பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள்.
பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களிலும் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும், வழக்குகள் சாதகமாக முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி அமைதியான சூழல் உருவாகும்.
தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் காணப்பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு வரும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வங்கி கடன்களுக்கு முடிவு கட்டுவீர்கள், புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய தொடக்கத்திற்கான ஒரு காலமாக இது அமையும்.
கன்னி

திரிஏகாதச யோகத்தால் கன்னி ராசியினரின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்கள், உயர் அதிகாரிகளின் உதவியுயையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.
நிறுவனத்தின் சார்பில் வெளிநாடு செல்லும் யோகமும் காணப்படுகிறது. தங்கள் திறமைகளை நிரூபித்து, தொழில் வாழ்க்கையில் சாதனைகள் பல செய்வார்கள்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |