மேடையில் கண்கலங்கிய மணமகன் - உடனே மணமகள் செய்த செயல்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
திருமண வரவேற்பு நிகழ்ச்சி மேடையில் கண்கலங்கிய மணமகனின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேடையில் கண்கலங்கிய மணமகன்
திருமணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும்.
மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
திருமண வரவேற்பு நிகழ்ச்சி மேடையில் மணமகன் சந்தோஷத்தில் கண் கலங்கினார். இதைப் பார்த்த மணமகள் உடனே அவரின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு மாலை மாற்றி ஒருவரையொருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்து இருவரையும் வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.