மறைந்து வந்து மணமகனின் கண்களை மூடி மணமகள் செய்த செயல் - வைரலாகும் க்யூட் வீடியோ
மறைந்து வந்து மணமகனின் கண்களை மூடி மணமகளின் செய்த செயல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணமகனின் கண்களை மூடி மணமகள் செய்த செயல்
திருமணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமகன் நின்றுக்கொண்டிருக்கையில் பின்னாலிலிருந்து மறைமுகமாக ஓடி வந்த மணமகள் திடீரென்று மணமகனின் கண்களை மூடுகிறார். மணமகன் கைகளை பிடித்து சரியாக மணமகள் பெயர் சொன்னதும், மணமகள் சிரிக்கிறாள்.
பின்னர் இருவரும் ஒருவரையொருவரை பார்த்து அழகாக புன்னகைத்துக் கொள்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்து தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.