படையப்பா... போய் என் மருமகளை கூட்டிட்டு வா.... - தாய் சொன்னதும் மகன் செய்த செயலைப் பாருங்க!
திருமணத்தில் தாய் சொன்னதும் மகன் செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமணத்தில் தாய் சொன்னதும் மகன் செய்த செயல்
திருமணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.
அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருமணத்தில் தாய் மகனைப் பார்த்து படையப்பா போய் என் மருமகளை கூட்டிட்டு வா என்று சொன்னதும், மகன் அப்படியே ரஜினி போல் ஸ்டைலாக சென்று மணமகளின் கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு வருகிறார். அப்போது, மகிழ்ச்சியில் வெற்றி குறியை செம்ம ஸ்டைலாக காட்டுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் செம்ம மாஸ்ப்பா.... என்று வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.