கொரோனா வார்டிலேயே பாதுகாப்பு உடையுடன் நடந்த திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது, ஒரு நாளைக்கு சுமார் 3.5 லட்சம் பேர் பாதிப்படைக்கின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கைனாகரி கிராமத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும், அபிராமி என்ற இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதனிடையே, திருமணம் சில நாட்கள் இருக்கும் நிலையில் மணமகனுக்கும், அவரது அம்மாவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தாய் மகன் இருவரும் அப்பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, குறித்த தேதியில் திருமணத்தை முடிக்க இரு வீட்டாரும் விருப்பம் தெரிவித்தனர்.
இதனால், மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் மணமகள் கவச உடை அணிந்து அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
