கண்ணீரில் மூழ்கிய திருமண வீடு! அக்காவை பிரிய மறுத்த தங்கையின் கலங்க வைத்த காட்சி
திருமண காரியத்தில் நிகழும் சம்பவங்களில் சில மகிழ்ச்சியினை தந்தாலும், சில காண்பவர்களை கண்கலங்க வைக்கவும் செய்கின்றது.
கலங்க வைத்த காட்சி
திருமணம் என்றாலே பெண்களுக்கு ஒருவித பயத்தை தான் ஏற்படுத்துகின்றது. காரணம் தனது பிறந்து வளர்ந்த குடும்பத்தினை விட்டுவிட்டு பழக்கம் இல்லாத ஒரு குடும்பத்தில் வாழ வேண்டும் என்பதே.
பல திருமண நிகழ்வில் பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் தருணத்தில், கண்ணீர் மல்க கதறுவதுண்டு. அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமே கண்ணீரில் தான் காணப்படும்.
இது போன்ற காட்சி தற்போது கண்கலங்க வைத்துள்ளது. ஆம் பெண் ஒருவர் தான் திருமணமான பின்பு குடும்பத்தை பிரிவதை நினைத்தும், குறிப்பாக தனது உடன்பிறந்த அக்காவை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுகின்றார்.
குறித்த பெண்ணின் அக்காவும் தனது சோகத்தை மறைக்க தெரியாமல் கதறியழுத சம்பவம் காண்பவர்களை கலங்க வைத்துள்ளது. ஒரு குடும்பத்தில் ஆயிரம் சண்டை வந்தாலும், இரண்டாவது அம்மாவாக இருக்கும் அக்காவை என்றும் நீங்கள் விட்டுவிடாதீர்கள் என்பதை அருமையாக விளக்கியுள்ளது இக்காட்சி.