கண்கலங்கிய மணமகள் - டான்ஸ் ஆடி சிரிக்க வைத்த மணமகன் - வைரலாகும் வீடியோ
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகளை சிரிக்க வைக்க டான்ஸ் ஆடிய மணமகனின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அழுத மணமகளை சிரிக்க வைத்த மணமகன் கல்யாணம்
திருமணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.
அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் கண் கலங்கிய அழுதபோது, திடீரென்று மணமகன் ஓடி வந்து டான்ஸ் ஆடி மணமகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த சர்ப்ரைஸில் மணமகள் அழுவதை நிறுத்தி விட்டு சிரிக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
