மொழிபெயர்ப்பு செய்வதற்கு இனி கஷ்டப்பட வேண்டமாம்... கூகுள் மொழிபெயர்ப்பில் புதிய அம்சம்
தற்போதைய காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் மொழிபெயர்ப்பிலும் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்து புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
மொழிபெயர்ப்பில் புதுமை
கூகுள் மொழிபெயர்ப்பு ஆண்ட்ராய்டு செயலியின் 9.3.78 பதிப்பில் இந்த புதிய AI வசதி சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.
இந்த AI அப்டேட் மூலம், பயனர்கள் மொழிபெயர்ப்புகள் குறித்து கேள்விகளை எழுப்பினால் மிகவும் நுணுக்கமான பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பின் தொனி மற்றும் கட்டமைப்பை மாற்ற, பயனர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் வழங்கப்படும். "ஃபார்மல்", "சிம்பிளிஃபை", "கேஷுவல்", "ஆல்டர்நேட்டிவ் ட்ரான்ஸ்லேஷன்ஸ்", "ரீஃப்ரேஸ்", "ரீஜனல் வேரியண்ட்ஸ்" போன்ற பட்டன்களைப் பயன்படுத்தி உங்களது தேவையை தெரிந்து கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பு சரியாக இருந்தால் "தம்ஸ் அப்" பட்டனையும், தவறாக இருந்தால் "தம்ஸ் டவுன்" பட்டனையும் தட்டி கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறான பதில் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை மேம்படுத்த உதவும். மேலும் இதில் ஸ்பீக்கர் ஐகானை தட்டி மொழிபெயர்ப்பில் உச்சரிப்பினை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாய்ப்பானது மொழி தடைகளை உடைத்து, உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்க உதவுகின்றது.
கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் ஜெமினி AI தொழில்நுட்பத்தின் வருகை, மொழிபெயர்ப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
