த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்!
நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான், தனது செயலுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.
இந்த பிரச்சனை முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என பலரும் நினைத்த நிலையில், தற்போது மீண்டும் புது பிரச்சனையை மன்சூர் அலிகான் ஆரம்பித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
த்ரிஷா-மன்சூர் விவகாரம்
இவர், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, இதற்கு முன்னர் தான் நடித்த படங்களில் எல்லாம் நாயகியை சேஸ் செய்து கற்பழிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் லியோ படத்தில் த்ரிஷாவை கண்ணில் கூட காட்டாமல் விமானத்திலேயே கொண்டு சென்று விட்டுவிட்டதாக கூறினார்.
இவர் இப்படி த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியது இணையத்தில் பொரும் புயலையே கிளப்பியது. இதே போல அவர் லியோ படத்தில் வெற்றி விழாவிலும் பேசினார். ஆனால் அதில் அவர் பட்டும் படாமல் பேசியிருந்ததால் பெரிதாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
த்ரிஷா குறித்து பேசிய விவகாரம் அவரது காதுக்கு எட்டவே, அவர் இதனை வன்மையாக கண்டித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ், நடிகைகள் ரோஜா, குஷ்பு, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் தேசிய மகளிர் உரிமை ஆணையம் தாமான முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகும் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை கூட்டி, தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். “மன்னிப்பது தெய்வம்..” மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியதும் பெரிய சர்ச்சையானது.
இதையடுத்து காவல் துறையினர் இவர் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கினர். அப்போது, த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து நடிகை த்ரிஷாவும் “தவறு செய்வது மனிதம், அதை மன்னிப்பது தெய்வம்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.
இந்த பஞ்சாயத்து இதோடு முடிந்தது என்று அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது புது பூகம்பம் ஒன்றை மன்சூர் அலிகான் கிளப்பியுள்ளார்.
த்ரிஷா-மன்சூர் விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சிர்ஞ்சீவியும் த்ரிஷாவிற்கு ஆதரவாக பேசினார். குஷ்பு மற்றும் ரோஜாவும் மன்சூர் அலிகான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு, நஷ்ட ஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் செய்த வழக்கு, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து மடைமாற்றம் செய்யத்தூண்டிய வழக்கு என அனைத்து பிரிவுகளுக்கு கீழும் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோட்ரில் தொடுக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதனால் மீண்டும் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் மீண்டும் இணையத்தில் புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |