கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்ட பழச்சாறு... தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலி கான்
கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்ட பழச்சாறு அருந்தியவுடன் திடீரென மயங்கி விழுந்த மன்சூர் அலி கான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்சூர் அலி கான்
நடிகர் மன்சூர் அலிகான் கடைசியாக சரக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் லியோவின் பிளாஷ்பேக் காட்சியை சொல்லும் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் மன்சூர் அலி கான் நடித்து மிரட்டினார்.
இவர் நடித்த சரக்கு படம் தோல்வியை சந்தித்தது. தற்போது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகின்றார் மன்சூர் அலி கான்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பலாப்பழம் சின்னத்தை வைத்து வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்த நிலையில், உடனடியாக அவரது கட்சியினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தற்போது அவருக்கு ஐ சியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.
மன்சூர் அலி கான் பூரண நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அறிக்கை
மன்சூர் அலிகான் தனது பிஆர்ஓ மூலம் வெளியிட்ட அறிக்கையில், கட்டாயப்படுத்தி பழச்சாறு கொடுத்தார்கள், பின்பு மோர் கொடுத்தார்கள்... குடித்ததும் சில நிமிடங்களில் வண்டியில் இருந்து விழ இருந்தேன்.
மயக்கத்துடன், நெஞ்சில் பயங்கரமான வலியும் ஏற்பட்டுள்ளது. அருகில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வலி நிற்கவில்லை என்பதால் வேறொரு மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைந்து வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |