Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு எங்கே, எப்போது?
நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தொடர்பான விவரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மனோஜ் பாரதிராஜா
“தாஜ் மஹால்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா.
இவர், பிரபல இயக்குநர், நடிகர் இமயம் பாரதிராஜாவின் மகன் ஆவார்.
மனோஜ் பாரதிராஜாவின் படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் அவர் முயற்சியை கைவிடாது, சினிமாவில் ஏதாவது ஒரு பணி செய்து கொண்டே இருந்தார்.
இதன்படி, எப்படியாவது இயக்குநராக ஆகி விட வேண்டும் என்ற ஆசையில் அதற்காக பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.
காலமானார்..
இந்த நிலையில், நேற்றைய தினம் காலாமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனோஜ் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இயக்குநர் பேரரசு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், "தந்தை மகனுக்குக் கொல்லி வைத்தது போன்ற துயரம் யாருக்கும் நடக்கக்கூடாது...” என குறிப்பிட்டிருந்தார்.
இறுதிச் சடங்கு எப்போது?
மனோஜ் பாரதி ராஜாவின் உடல் தற்போது அவருடைய சேத்துபட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து உடலை நீலாங்கரை இல்லத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்.
அதன் பின்னர், இன்றைய தினம் மாலை 3 மணியளவில் நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |