குடிக்கு அடிமையாகி புற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த ரஜினி பட நடிகை!
குடிக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்து விட்டு தற்போது அதை நினைத்து வருதத்துடன் இருக்கிறார் மனிஷா கொய்ராலா.
நடிகை மனிஷா கொய்ராலா
தமிழ் சினிமாவில் பம்பாய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி அதன் பின் இந்தியன், பாபா, முதல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து அப்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் மனிஷா கொய்ராலா.
இவர் நேபாளத்தில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரை முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு பம்பாய் திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம் தான். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட பின் 2010ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் திருமணம் செய்து 2 வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.
குடியால் தொலைந்த வாழ்க்கை
விவாகரத்திற்குப் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி தற்போது தான் நோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், தன் வாழ்க்கைப் பாழானதை பற்றி அவரே தெரிவித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தாவது, விவாகரத்துப் பெற்ற பிறகு கடுமையான மன அழுத்தத்தில் போராடியதாகவும் அதற்காக தான் குடிப்பழக்கத்தை தேர்ந்தெடுத்ததாகவும் நாளடைவில் அதற்கு அடிமையானதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தக் குடிப்பழக்கத்தால் தன் வாழ்க்கை தலைகீழாக மாறியதாகவும் தன்னுடைய மதிப்பு மிக்க வாழ்க்கையை தானே இழந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், எந்த பிரச்சினைகளுக்கும் மது பழக்கம் ஒரு தீர்வாக இருக்காது எனவும் மாறாக நம்மை அது அடிமையாக்கிவிடும் என தன் துன்பங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |