புது வீட்டில் முதல் ரம்ஜான் கொண்டாடிய மணிமேகலை... வைரலாகும் புகைப்படம்
தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடைய காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து தங்கள் புது வீட்டில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி மணிமேகலை
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்த மணிமேகலைக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. சின்னத்திரை நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கிவரும் இவர், கடந்த 2017ம் ஆண்டு ஹுசைன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களி்ன திருமணத்தினை தற்போது வரை இரண்டு பேரின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தனது காதலருக்காக மணிமேகலை மதம் மாறவும் செய்தார்.
வீட்டைவிட்டு வெளியேறி வந்த இந்த காதல் ஜோடிகளுக்கு நண்பர்கள் திருமணம் செய்து வைத்தனர். சில ஆண்டுகள் கஷ்டப்பட்ட இவர்களுக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சி கிடைத்ததால் முன்னேறியுள்ளனர்.
புது வீட்டில் ரம்ஜான்
இந்த ஜோடி தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர். அதன் மூலமும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வரும் இவர்கள் ஆரம்பத்தில் வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு வாங்கி அண்மையில் குடியேறியுள்ளனர். இதுதவிர இவர்களுக்கு சொந்தமாக பண்ணைவீடு ஒன்றும் உள்ளது.
திருமணத்திற்கு பின்பு தவறாமல் ரம்ஜான் கொண்டாடிவரும் மணிமேகலை இந்த ஆண்டு தான் குடியேறிய புது வீட்டில் ரம்ஜான் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |