மணிமேகலை வெளியேறியதற்கு காரணம் இதோ! மிகப்பெரிய பிரபலத்துடன் வெளியான புகைப்படம்
குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறிய மணிமேகலை பிரபல லெஜன்ட் சரவணன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி மணிமேகலை
பிரபல டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் புகழ்பெற்றார் மணிமேகலை. ஆரம்ப காலத்தில் ரிவி தொகுப்பாளராக அறிமுகமான இவர், நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை வெளியேறினார். இவர் எதற்காக வெளியேறினார் என்ற கேள்வி மக்களை துளைத்துக்கொண்டே இருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, குக் வித் கோமாளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் உடன் ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இப்புகைப்படத்தினை வெளியிட்டு சரவண ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க உள்ளதாக தகவலையும் கொடுத்துள்ளனர்.