வெளியேறிய நேரத்திலும் அசிம்-க்கு மணிகண்டா கொடுத்த அட்வைஸ்!
வெளியேறிய நேரத்திலும் மணிகண்டா அசிம்க்கு கொடுத்த சொன்ன விஷயங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் 6 வது ஆண்டாக தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ளன . எனவே போட்டி முன்பை விட மேலும் கடினமாக மாறி இருக்கிறது.
இன்னும் 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
மணிகண்டா வெளியேற்றம்
இதனைத் தொடர்ந்து, மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத இந்த வெளியேற்றம் சக போட்டியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அசிம், மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் கண் கலங்கியும் போன நிலையில், அவரை வாழ்த்தியும் அனுப்பி இருந்தனர்.
அட்வைஸ்
இந்தநிலையில் கமல்ஹாசன் அருகே நின்ற படி போட்டியாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்த மணிகண்டா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது அசிமிடம் மணிகண்டா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அசிம் நல்லா விளையாடு, கோவப்படாத. தயவு செஞ்சு விக்ரமன் கூட சண்டை போடாத. மரியாதையா எல்லார்கூடயும் நடந்து ஒழுங்கா இரு. லவ் யூ மச்சான்" என தெரிவித்துள்ளார்.
தற்போது மணிகண்டா பேசிய விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்தாகும்.