வயிறு, வாய் புண் பிரச்சனையால் அவதியா? இந்த கீரையில் குழம்பு வைத்து சாப்பிடுங்க
இன்று பெரும்பாலான நபர்களின் உணவுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அவை அல்சர் பிரச்சினையை ஏற்படுத்துவிடுகின்றது.
வாய் மற்றும் வயிற்றில் புண் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு மணத்தக்காளி கீரை சிறந்த மருந்தாக பயன்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கின்றது. இந்த கீரையில் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மணத் தக்காளி கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 15
வரமிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 கப்
மஞ்சள்தூள், எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து நீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ளவும். தேங்காயில் தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வரமிளகாய், சீரகம், வெந்தயம் இவற்றினை தாளித்து சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் கீரையை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட்டால் சுவையான மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி கீரை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |