தனக்குத்தானே கட்டிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட முதியவர்!
பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு தானே கல்லறை கட்டிக்கொண்டதால் பிரபலமாக முதியவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) காலமானார்.
அவரின் உடல் அவரே ஆசையாகக் கட்டிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டதுள்ளது. அவரின் கல்லறையில், இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த முதியவர்?
தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தான் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சம் ரூபா செலவில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டி வைத்தார்.
[1S9ZF ]
இவர் தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பதும், அவர் அந்த கிராமத்துக்கு ஒரு தேவாலயத்தையும் கட்டிக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |