கொரோனாவிலிருந்து தப்பிக்க முதியவரின் அட்டகாசமான மாஸ்க்... வைரலாகும் காணொளி
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் பயங்கரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு மக்களை காப்பாற்ற போராடி வருகின்றது.
இந்நிலையில் முதியவர் ஒருவர் துளசி மற்றும் வேப்பிலையுடன் கூடிய மாஸ்க் அணிந்திருக்கும் காணொளியினை டெல்லி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்காக முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறுது. இருப்பினும், முகக் கவசம் அணியும் விஷயத்தில் சில வேடிக்கையான சம்பவங்களும் நடக்கின்றனர்.
சிலர் தங்களது முகக் கவசங்களை தங்கத்தினாலும், வெள்ளியாலும் அலங்கரித்து அணிந்து கொள்கிறார்கள். இந்நிலையில், முதியவர் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், அந்த முதியவர் அணிந்துள்ள முகக் கவசம் வித்தியாசமாக உள்ளது.
இதுகுறித்து அந்த வீடியோவில் முதியவர் கூறுகையில், ‘வேப்ப இலையுடன், துளசியும் இலைகளையும் சேர்த்து முகக் கவசம் அணிந்துள்ளேன். இதற்காக தனியாக கயிற்றால் வலை செய்தேன். இவ்வாறு அணிவதால், பல நோய்களில் இருந்து நாம் தப்பலாம்’ என்றார்.
மேற்கண்ட இந்த வீடியோவை, ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இவர் அணிந்துள்ள மாஸ்க் கண்டிப்பாக நோய் பரவலில் இருந்து நம்மை காப்பாற்றாது. இருந்தாலும், இந்த முதியவரின் மாஸ்க் குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் தயவுசெய்து கருத்து தெரிவிக்கவும்’ என்று தெரிவித்துள்ளார்.
Not sure this #MASK WILL HELP.
— Rupin Sharma IPS (@rupin1992) May 22, 2021
जुगाड़☺️☺️
Still #मजबूरी_का_नाम_महात्मा_गांधी#NECESSITY_is_the_mother_of_JUGAAD #Mask And Medicine????? pic.twitter.com/uHcHPIBy9D