வயிற்றுக்குள் முழு செல்போன்: ஸ்கேனில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி
எகிப்தில் அறுவை சிகிச்சையின் மூலம் இளம் நபரின் வயிற்றுக்குள் இருந்து முழு செல்போன் எடுக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
எகிப்தில் கடுமையான வயிற்றுவலியால் துடி்துடித்த நபர் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
உடனடியாக மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது, வயிற்றுக்குள் செல்போன் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த நபரிடம் விசாரித்ததில், ஆறு மாதங்களுக்கு முன்னர் செல்போனை விழுங்கியதாகவும், தானாகவே வந்துவிடும் என அவர் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் செல்போன் வயிற்று பகுதியை அடைத்துக்கொண்டதால், கடுமையான வலியால் துடிதுடித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் செல்போனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
எனினும் எதற்காக செல்போனை விழுங்கினார் என்ற காரணம் தெரியவரவில்லை.