இளைஞரின் கண்களை தின்ற அரிய வகை ஒட்டுண்ணி! மக்களே எச்சரிக்கை: அதிர்ச்சி காரணம் இதோ
அமெரிக்காவில் காண்டெக்ட் லென்ஸ் அணிந்து தூங்கிய இளைஞர் ஒருவரின் கண்களை அரிய வகை ஒட்டுண்ணிகள் தின்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையை இழந்த இளைஞர்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மைக் க்ரம்ஹோல்ஸ் என்ற 21 வயது இளைஞர் கண்ணில் காண்டெக்ட் லென்ஸ் அணிந்து வந்துள்ளார்.
இவ்வாறு வழக்கமாக லென்ஸை அணிந்து சென்ற அவர், ஒருநாள் தன்னை மறந்து லென்ஸை கழற்றாமல் தூங்கியுள்ளார். பின்பு கண் சிவப்பாக இருப்பது, கண்ணில் வலி என இடையில் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.
இதனை சகஜமாக எடுத்துக்கொண்ட அந்த இளைஞருக்கு, நாளடைவில் கண்பார்வையே பறிபோயுள்ளது. ஆம் கண்களில் சதை உண்ணும் அரிய வகை ஒட்டுண்ணி உருவாகி தற்போது வலது கண்ணில் பார்வையையே இழந்துள்ளார்.
மைக்கின் வலது கண்ணில் அகந்தமோபா கெராடிடிஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இதற்கு காரணம் லென்ஸை அணிந்துகொண்டு அவர் தூங்கியது தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அரியவகையான ஒட்டுண்ணியானது, கண்களில் நுழைந்து திசுக்களை சாப்பிட்டுவிடுவதால் பார்வையே இல்லாமல் போவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர் அரசிடம் நிதி உதவி கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், இவ்வாறு லென்ஸ் அணியும் நபர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
அதாவது லென்ஸ் அணிந்து கொண்டு குளிப்பதோ, அல்லது தூங்குவதையோ தயவு செய்து செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.