வீடு கட்ட சேர்த்த பணம்... கட்டு கட்டாக தீயில் எரித்த கணவர்! நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நபர் ஒருவர் பணக்கட்டுகளை தீயில் போட்டு எரிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
தீயில் எரிக்கப்பட்ட பணம்
இன்றைய காலத்தில் மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக இரவு, பகலும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நபர் ஒருவர் தான் சேர்த்து வைத்த பணத்தினை கட்டுகட்டாக தீயில் வைத்து எரித்துள்ளார்.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஜெய்பூரில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மஞ்ஜீத் தாகத் என்ற நபரின் மனைவி 22 ஆயிரத்திற்கு தனது கணவருக்கு கோட் சூட் வாங்கியுள்ளார்.

மனைவி எடுத்துக் கொடுத்த ஆடையின் விலையைக் கேட்டுள்ளார். உண்மையை மனைவி கூறிய நிலையில், 22 ஆயிரம் கொடுத்து ஆடை எடுக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார்.
வீடு கட்டுவதற்காக பணத்தினை சேர்த்து வைத்துள்ளதாகவும், நீ இப்படி செலவு செய்கிறாய் என்று கூறியதால், கோபப்பட்டு மனைவி கோபப்பட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனது மனைவி தன்னை புரிந்து கொள்ளாமல் சென்றுவிட்டதை நினைத்து கணவர் விரக்தியடைந்துள்ளார். இதற்கு காரணம் தான் சேர்த்து வைத்த பணம் தான் என்று யோசித்தவர், வங்கியில் தான் சேர்த்து வைத்த பணம் மொத்தத்தையும் எடுத்துள்ளார்.
அதனை சாலையில் வைத்து தீயில் ஒவ்வொன்றாக போட்டு கொளுத்தியுள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகிய நிலையில், குறித்த நபரை போலிஸ் அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |