ஒரே மேடையில் 2 காதலிக்கு தாலி கட்டிய நபர்... விநோத திருமணத்தின் வைரல் புகைப்படம்
தெலுங்கானாவில் பழங்குடியின ஆண் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இரண்டு பெண்களுடன் திருமணம்
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் பல்வேறு வகையான சம்பிரதாய சடங்குகள் நடைமுறையில் இருந்து வருகின்றது.
அந்த வகையில் குறித்த கிராமத்தை சேர்ந்த சத்திபாபு என்பவர், ஒரே நேரத்தில் தோசலி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னகுமாரி என்பவரையும் தனது முறைப்பெண்ணான சுனிதா என்பவரையும் காதலித்து வந்துள்ளார்.
குறித்த கிராம சம்பிரதாயத்தின் படி திருமணத்திற்கு முன்பே, பெண்ணுடன் சேர்ந்து வாழ வேண்டுமாம்.. இதன்படி சத்திபாபு குறித்த இரண்டு பெண்களுடன் வாழ்ந்து, ழஸ்வப்னாவிற்கு ஒரு மகளும், சுனிதாவிற்கு ஒரு மகனும் பிறந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு பெண்களின் பெற்றோர் தங்களது மகளை திருமணம் செய்ய கேட்டுள்ளனர். பின்பு குடும்பத்தினர் முன்னிலையில் இரண்டு பெண்களுக்கும் சத்திபாபு தாலிகட்டியுள்ளார்.
ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்ட சத்திபாபுவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.