10 ஆண்டுகளாக பயங்கரம்! மயக்கத்தில் மனைவியை மற்ற ஆண்களுக்கு விருந்தாக்கிய கணவன்
பிரான்சில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு போதை மருந்து கொடுத்து 80க்கும் மேற்பட்டோரை வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் Mazan பகுதியை சேர்ந்தவர் டோம்னிக் பி, இவருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பாலியல் வன்கெடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது, மனைவியின் மதிய உணவில் ஒருவகையான போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளார், அவர் மயக்க நிலைக்கு சென்றதும் அந்நிய நபர்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
அதனை படம்பிடித்து ABUSES என்ற பெயரில் கணனியில் சேமித்தும் வைத்துள்ளார், 2020ம் ஆண்டு இவரது நடவடிக்கைகளில் பொலிசாருக்கு சந்தேகம் வரவே விசாரணை நடத்தியதில் உண்மைகள் அமபலமாகியுள்ளது.
10 ஆண்டுகளாக 26 வயது முதல் 73 வயது வரை உள்ள 83 பேர் இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தீயணைப்படை வீரர்களாவோ, லொறி ஓட்டுநர்களாகவோ, வங்கி அதிகாரியாகவே, அரசாங்க ஊழியராகவோ இருந்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
2011 முதல் 2020ம் ஆண்டு வரை இக்குற்றச்செயல்கள் நடந்துள்ளது, வீட்டிற்கு வரும் நபர்களுக்கு டோம்னிக் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தங்களது வீட்டுக்கு வரும் நபர்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்த கூடாது என்றும், அருகில் உள்ள பள்ளியில் வாகனத்தை விட்டுவிட்டு முழுதாக முகத்தை மறைத்தபடி வரவெண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், அந்நிய ஆண்களை அழைப்பதற்காக ஓன்லைனில் இணையத்தளம் ஒன்றை அமைத்து அதன்மூலம் வரவழைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் மனைவி மயக்கத்தில் இருந்து எழுந்துவிடக்கூடாது என்பதற்காக யாரும் புகையிலையை பயன்படுத்தக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்துள்ளார்.
இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்ட டோம்னிக்கை கைது செய்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது, இவரது கொடூர முகம் தெரிந்ததும் டோம்னிக்கை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |