ஆசையாக ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த இளைஞர்! உள்ளே இருந்தது என்ன தெரியுமா? வைரல் வீடியோ
உலகம் முழுவதுமே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. சில நேரங்களில் ஆன்லைனில் உணவு டெலிவரியில் நாம் ஆர்டர் செய்யும் உணவு ஒன்றாகவும், டெலிவரி செய்யப்படும் உணவு ஒன்றாகவும் மாறிவிடுவதை குற்றசாட்டாக வைக்கின்றனர்.
அந்த வகையில், டெல்லியை சேர்ந்த உபைத் என்ற இளைஞர் ஆன்னைன் உணவு டெலிவரி ஆப் மூலமாக ஆனியன் ரிங்ஸ் என்ற உணவை ஆர்டர் செய்துள்ளார்.
உணவு சிறிது நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டதை அடுத்து, அந்த நபர் பார்சலை பிரித்து பார்த்தபோது அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அதாவது ஆர்டர் செய்த ஆனியன் ரிங்ஸ்க்கு பதிலாக, வெறும் வெட்டப்பட்ட வெங்காயம் மட்டுமே இருந்துள்ளது.
இதன்பின்னர், இளைஞர் உணவகத்தைக் கண்டிக்கும் விதமாக டெலிவரி செய்யப்பட்ட அந்த வெங்காயத் துண்டுகளை தனது விரல்களில் மோதிரம் போல மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பலவிதமான கமெண்ட்ஸ்களை அவருக்கு குவிந்து வருகின்றன.