பாடலுக்கு நடனமாடியதால் மணப்பெண்ணை விவாகரத்து செய்த மணமகன்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
பாடல் ஒன்றிற்கு நடனமாடியதால் மணமகன் விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் திருமணம் ஒன்று கோலாகலமாக நடைப்பெற்றுள்து.
அந்த திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் மெசைதாரா என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அந்த பாடலின் அர்த்தமானது மணப்பெண் மணமகனை கட்டுப்படுத்துவதாகவும், மணமகன் அவளுக்கு அடங்கி கிடப்பதாகவும் வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால், மணப்பெண்ணின் செயலுக்கு மாப்பிள்ளை வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சினை பெரிதான நிலையில் திருமணம் செய்த அன்றே மணமகளை விவாகரத்து செய்வதாக மணமகன் அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக, ஒரு பாடலால் திருமணத்தன்றே விவாகரத்தும் நடந்த சம்பவம் வைரலாகி வருகிறது.