இருமலால் அவதிப்பட்ட நபருக்கு ஸ்கேன் எடுத்த மருத்துவர்! கிடைத்த அதிர்ச்சி என்ன?
பல ஆண்டுகளாக தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த நபரின் X-Ray ஸ்கேனை பாரத்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இருமலால் அவதிப்பட்ட நபர்
இருமலால் அவதிப்பட்ட நோயாளியினை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடம்பில் ஒட்டுண்ணி மற்றும் நாடாப்புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த மருத்துவர் தனது டுவிட்டரில் ஸ்கேன் படத்தினை பகிர்ந்துள்ளார். டாப்புழு இனத்தின் லார்வாக்கள் தசைகள் அல்லது மூளை திசுக்களில் நுழையும் போது சிஸ்டிசெர்கோசிஸ் எனப்படும் இந்த நிலை ஏற்படுகிறது.
அசுத்தமான உணவை உட்கொள்ளும் போது இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுவாக இந்த லார்வாக்கல் தோல் வழியாக உணரக்கூடிய கடினமான நீர்க்கட்டிகளை உருவாக்குகின்றது.
ஆனால் இறந்த புழுக்களில் இருக்கும் நீர்க்கட்டிகள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர்.
மேலும் இந்த நீர் கட்டிகள் கண்களையும் பாதிப்பதால், மங்களலான பார்வையை ஏற்படுகின்றது.
புழு தொல்லையால் இருமல்
நுரையீரலில் நீர்க்கட்டிகள் இணைக்கப்படும்போது மார்பு வலி மற்றும் இருமல் ஏற்படலாம். மேலும் அவை முதுகுத் தண்டுவடத்திலோ அல்லது மூளையிலோ ஏற்பட்டால், அவை நியூரோசிஸ்டிசிரோசிஸை ஏற்படுத்தலாம். இந்த நாடாப்புழுவின் நோய் தொற்றின் தீவிரம் வலிப்பு நோயை ஏற்படுத்துகின்றது.