ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய நபர்... இப்படியெல்லாமா ஷாப்பிங் பண்ணுவாங்க?
சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த ஆண்டில் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக காண்டம் வாங்குவதற்கு மட்டும் ரூ.1,06,398 செலவிட்டுள்ளது நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆன்லைன் ஷாப்பிங்
இன்றைய காலத்தில் பெரும்பாலான இல்லத்தரசிகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கி விடுகின்றனர்.
உணவு, மளிகை சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் ஆர்டர் போட்டு வாங்கும் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிலையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஷாப்பிங் செய்துள்ளது பேச்சு பொருளாகியுள்ளது.

அதாவது இந்த ஆண்டு காண்டம் வாங்குவதற்கு மட்டும் ரூபாய் 1,06,398 செலவு செய்துள்ளார். 228 முறை ஆர்டர் செய்துள்ளாராம்.
மாதத்தில் சுமார் 19 முறை காண்டம் ஆர்டர் செய்துள்ளது. ஸ்விக்கி நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கிடைத்த ஒரு நகைச்சுவையான சான்று என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |