உடலில் இருந்த பிரச்சினை... 26 ஆண்டு காலம் கழித்து ரசிகர்களுக்கு மம்முட்டி கொடுத்த ஷாக்!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் மம்முட்டி. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.
மேலும், அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.