வீட்டிலேயே இரசாயனமற்ற கற்றாழை ஜெல்லை எப்படி தயாரித்து நீண்ட நாள் சேமிப்பது?
கற்றாழை ஜெல் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு இயற்கை அற்புதமாகும். நாம் நமது அழகில் சிறந்த பலனை பெற கலப்படம் செய்யப்பட்ட கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும்.
தற்போது சந்தையில் கிடைக்கும் கற்றாழை ஜெல் கலப்படமாக இருப்பதால் தலைமுடி மற்றும் சருமத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
இந்த காரணத்தினால் வீட்டிலேயே கற்றாழை ஜெல்லை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கலப்படம் இல்லாத கற்றாழை ஜெல்
முதலில், கற்றாழை இலைகளை வெட்டி, பின்னர் அவற்றை தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இலைகளை தண்ணீரில் கழுவிய பின், அவற்றை உரிக்கவும்.
இப்போது ஒரு கரண்டியின் உதவியுடன், ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை வெளியே எடுக்கவும். இதற்குப் பின்னர் கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
இப்போது இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் வடிகட்டவும். இப்படி வடிகட்டிய ஜெல்லில் வைட்டமின் ஈ எண்ணெயையும் சேர்க்க வேண்டும். இதை காற்று உட்புகாத ஒரு கண்ணாடி போத்தலில் போட்டு வைக்கலாம்.
மாதகணக்கில் இதை சேமிக்க வேண்டும் என்றால் ஐஸ்கட்டிகளில் வைப்பது நல்லது. இது முழுக்க முழுக்க இரசாயனம் இல்லாததால் நம் சருமத்திற்கு எந்த ஒரு தீங்கையும் கொடுக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |