சீரியல் நடிகை மகாலட்சுமி வெளியிட்ட அதிரடி பதிவு... வைரலாகும் புகைப்படம்
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தற்போது வெளியிட்டுள்ள பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மகாலட்சுமி- ரவீந்தர்
சமூக வலைதளமே மிரண்டு போகும் வகையில் பரபரப்பை ஏற்படுத்திய திருமணங்களில் ஒன்று தான் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணம்.
ரவீந்தர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர். பிக்பாஸ் நிகழ்சியில் கலந்துக்கொண்டு மேலும் பிரபலமானார்.
கடந்த 2022ம் ஆண்டு இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை மறுமணம் செய்து சந்தோஷமாக புகைப்படத்தை வெளியிட இணையத்தில் சர்ச்சை வெடித்தது.
உடல் எடையில் அதிகமாக இருக்கும் ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்ததே பணத்திற்காக தான் என நிறைய விமர்சனங்கள் குவிந்தது.
ஆனால் அவர்கள் இருவருமே அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருவதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
இவர்கள் திருமணத்திற்கு பிறகு செய்யும் சிறு சிறு விஷயங்களும் ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
பண மோசடி
சமீபத்தில் பண மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்யப்பட்ட விஷயம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் கூறி 16கோடியை மேசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
தயாரிப்பாளார் ரவீந்தர் குறித்து வதந்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், அதுகுறித்து அவரது மனைவி மஹாலக்ஷ்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை
அதில் "எங்களுக்கு உண்மை தெரியும், அது தான் மிகவும் முக்கியம். நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம், டிராமா செய்வதை விட அமைதியை விரும்புகிறோம்." "முழு கதை என்ன என்பதை தெரிந்துகொள்ளாமல் எங்களை பற்றி முடிவு செய்யாதீர்கள்.
உண்மை விரைவில் வரும். நாங்கள் ஆரோகியமாக, பாசிட்டிவ் ஆக, நிஜமாகவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்" என மஹாலஷ்மி குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைராலாகி வருவதுடன் நேர்மறையான கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |