கணவர் ரவீந்தர் பிறந்தநாளுக்கு மகனுடன் மகாலட்சுமி கொடுத்த சர்ப்ரைஸ்
தயாரிப்பாளர் ரவீந்தர் பிறந்தநாளை அவரது மனைவி மகாலட்சுமி சிறப்பாக கொண்டாடியுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை மகாலட்சுமி
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர் தான் மகாலட்சுமி. அவ்வாறு தொகுப்பாளினியிலிருந்து சின்னத்திரையில் வாப்பு கிடைத்த நிலையில் சின்னத்திரையில் களமிறங்கினார்.
தற்போது பல சீரியல்களில் நடித்து வருவதுடன், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் அசத்தி வருகின்றார். மேலும் ஊறுகாய் தொழிலும் செய்து வருகின்றார்.
இவர் தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிகள் கேலி கிண்டலுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். தனது கணவர் ரவீந்தரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த புகைபடத்தையும் வெளியிட்டதுடன், நீண்ட பதிவு ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், நீங்கள் என் கணவர் மட்டுமல்ல; என் பலம், என் அமைதி மற்றும் என் மகிழ்ச்சியான தருணங்கள் பலவற்றிற்கும் நீங்களே காரணம். உங்கள் குணநலன்களை நான் பெரிதும் மதிக்கிறேன்; உங்கள் துணையுடன் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும், நான் எப்போதும் உங்கள் பக்கபலமாக இருப்பேன். உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுவேன். ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் கையைப் பிடித்து உடன் வருவேன்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே... என் பாதுகாப்பான இடமே... என் வாழ்வின் துணையே என்று தன் கணவர் மீதான காதலைக் கொட்டித் தீர்த்துள்ளார் மஹாலக்ஷ்மி.

மேலும், இந்த புதிய ஆண்டில் ரவீந்தருக்கு நல்ல ஆரோக்கியம், எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் தொட்டதெல்லாம் துலங்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் அவர் இறைவனைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகாலட்சுமி வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் , வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |