மகாலட்சுமி ராஜயோகம்: நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுபவர் செவ்வாய். இவர் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
பொதுவாக, செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அந்த வகையில், தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரனும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதன் காரணமாக, கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைவதால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த மகாலட்சுமி ராஜயோகம் நவம்பர் 1ஆம் தேதி உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த யோகம் நிதி ஆதாயங்கள், வணிக வளர்ச்சி மற்றும் தொழிலில் முன்னேற்றம் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் இதன் மூலம் அதிக அதிர்ஷ்டத்தையும் நற்பலன்களையும் பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி, கடக ராசியில் உருவாகவுள்ள மகாலட்சுமி ராஜயோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால், நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
மேஷம்

மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பண வரவு அதிகரிக்கும். இருப்பினும், நிதி முடிவுகளை அவசரமாக எடுக்காமல், முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது.
துலாம்

துலாம் ராசியின் 10-ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால், நிதி நிலை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்குப் புதிய நட்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும்.வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தினால் சேமிப்பும் உயரும்.
கும்பம்

கும்ப ராசியின் 6-ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால், பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
தொழிலில் புதிய திட்டங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கலாம். கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் தொழிலில் உயர்ந்த நிலையை அடையலாம். கடின உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |