மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்!
ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் என இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது.இந்துக்களை பொருத்த வரையில் சிவன் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.
சிவபெருமான் தன்னை வணங்குபவர்களக்கு மாத்திரமன்றி அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவராக அறியப்படுகின்றார்.

மகாசிவராத்திரி நாளில் தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணமானதாக குறிப்பிடப்படுகின்றது. எனவே தான் இந்த தினம் இத்தனை சிறப்பு மிக்கதாக கருதப்படுகின்றது.
இவ்வளவு சிறப்பு கொண்ட சிவராத்திரி தினம் இந்த ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்த நல்ல நாளில், சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் 4 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

இப்படி 4 கிரகங்கள் ஒன்றிணைவதால் மிகவும் சக்தி வாய்ந்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. அதன் தாக்கமாகது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப்போகின்றது.
அப்படி ராகு, புதன், சுக்கிரன் மற்றும், சூரியன் கும்ப ராசியில் இணைவதால்,உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அமோக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் குறித்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் பொருளாதார நிலையில், பாரிய ஏற்றம் ஏற்படப்போகின்றது. எதிர்பாரா வகையில் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
முன்னைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.குடும்பத்தில் நல்ல காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். சூரியன், சுக்கிரன் ஆசியால், செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்கள் இதுவரை சந்தித்து வந்த பண பிரச்சனைகளுக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும். இவர்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத உயர்வு கிட்டும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்காக வாய்ப்புகள் காணப்படுகின்றது. நீண்ட போராட்டத்துக்கு பின் பரம்பரரை சொத்து கைக்கு வரும்.
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுக்கிரனின் அருளால் தம்பதிகளுக்குள் காதல் அதிகரிக்கும். சூரிய பகவான் ஆசியால், தலைமை பொறுப்புகளில் அமரும் வாய்பு காணப்படுகின்றது.
கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது குறித்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, பொருளாதாரம் உயர்வடையும்.
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்சியடைவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கைகூடி வரும். இக்காலத்தில் மேற்கொள்ளும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனை கொடுக்கும்.
புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வருபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வெற்றி கிடைக்கும். சூரியனின் ஆசியால் உயர் பதவியும், சுக்கிரனால் செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |