கொரோனா தடுப்பூசி போட்டதும் திடீர் மாற்றம்! காந்த சக்தியால் உடலில் ஒட்டிக்கொள்ளும் பொருட்கள்
பொதுவாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற பயம் மக்களிடையே இருந்து வரும் நிலையில், நபர் ஒருவருக்கு உடலில் காந்தத் தன்மை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல், தலைவலி வரும் என்று கூறியுள்ள நிலையில், மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கு காந்த சக்தி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சிவாஜி சவுக்கில் வசித்து வருபவர் அரவிந்த் சோனர். இவர் சில நாட்களுக்கு முன் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
அடுத்த சில நாட்களில் அவர் உடலில் காந்த சக்தி ஏற்பட்டு விட்டதாகவும், உடலில் எந்த பாகத்தில் இரும்பு பாத்திரத்தினை வைத்தால் அவை ஒட்டிக்கொள்வதாக கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பின்பு பயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களும் இவரை பரிசோதித்ததில், எப்படி என்று கண்டுபிடிக்கமுடியாமல் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் காந்த சக்தி ஏற்பட்டதாக அரவிந்த சோனர் கூறுவதை, மும்பையை சேர்ந்த ஜே ஜே மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் டட்யாராவே லஹானே மறுத்துள்ளார்.
அவர் கூறும்போது, ’உலகம் முழுவதும் ஏராளமானோருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. அதனால், அதற்கும் உடலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற எதுவும் நடக்காது’ என்று தெரிவித்துள்ளார்.
