Butter Bun: மதுரை ஸ்டைல் பட்டர் பன் ... வெறும் 5 நிமிடத்தில் எவ்வாறு தயாரிக்கலாம்?
தமிழகத்தில் மதுரை ஸ்பெஷலாக இருக்கும் பட்டர் பன் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இனிப்பை அதிகமாக விரும்புபவர்களின் தெரிவாக இருப்பது பட்டன் பன் ஆகும். மதுரை மாநகரில் பல அசைவ உணவுகள் பிரபலமாக இருக்கும் நிலையில் பட்டர் பன்னும் அங்கு பிரபலமான இருக்கின்றது.
தற்போது மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மென்மையான பன் – 2
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பாலாடை / க்ரீம் / மில்க்மெய்டு – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் பன்னை இரண்டாக கீறி, இடையில் கொஞ்சம் வெண்ணெய் மற்றும் சீனியை வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
வெண்ணெய் உருகியதும், அதன் மீது பன்னை வைக்க வேண்டும். இரண்டு பக்கமும் பன்னை நன்றாக திருப்பி போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.
அவ்வப்போது தேவைக்கு ஏற்ப வெண்ணெய்யை சுற்றிலும் சேர்த்துக் கொள்ளவும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப பன் மீது கிரீம் தடவிக் கொள்ளலாம்.
கடைசில் இன்னொரு டீஸ்பூன் வெண்ணெய் மேல் மசிய தடவி, வெண்மையாக மெலியும் வாசனை வரும் வரை பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |