காரம் தூக்கலா Non Veg ரசம் - இப்படி ஒரு முறை செய்து பாருங்க
ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு உணவு மிகவும் பேமஸ் ஆக இருக்கும். அப்படி தான் மதுரை மேலூர் மணப்பட்டியில் Non Veg ரசம் மிகவும் பேமஸ் ஆக இருக்கின்றது.
இந்த ரசம் அதிக சுவையும் உடலுக்கு தேவையான வலிமையும் கொடுக்கிறது. கிராமிய சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த இந்த ரசம், ஜீரணம் மேம்படவும் உடல் சோர்வு குறையவும் உதவுகிறது.
இதை செய்ய விட்டில் இரக்கும் எளிய பொருட்களே போதும் எப்படி செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மிளகு - 1 டீ ஸ்பூன்,
- சீரகம் - 1 டீ ஸ்பூன்,
- பூண்டு - 20 பல்,
- எலுமிச்சை - பாதி பழம் (1/2),
- புளி - (எலுமிச்சை அளவு),
- மட்டன் சாறு - 1 கப் ,
- உப்பு - தேவையான அளவு,
- கடலை எண்ணெய் - 2 டீ ஸ்பூன்,
- வரமிளகு - 2 ,
- கொத்த மல்லி - 1 கைப்பிடி,
- கருவேப்பிலை - (1/2) அறை கைப்பிடி அளவு,
- தக்காளி - 2 (பெரிய அளவு),
- துவரம் பரும்பு - 50 கிராம்,
- மட்டன் எலும்பு -100 கிராம்,
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்,
- மஞ்சள் தூள் - 1/4 கால் டீ ஸ்பூன்,
- புதினா - தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்யும் முறை
இந்த ரசம் செய்ய முதலில் குக்கரில் மட்டன் எலும்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் , மஞ்சள் தூள், புதினா ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் இரண்டு தக்காளி மற்றும் கொத்தமல்லி போட்டு அதில் புலி தண்ணீர் மற்றும் ரசத்திற்கு தேவையான தண்ணீரையும் சேர்த்து கையை வைத்து நன்றாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வரமிளகாய் போட வேண்டும். கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை, மஞ்சள் தூள் போட வேண்டும்.

மஞ்சள் தூள் கருகும் முன் ரச தண்ணீரை ஊற்ற வேண்டும்.பின்பு ரச தண்ணீர் சேர்த்த பின் 10 நிமிடம் அடுப்பை தொடர்ந்து குறைவான தீயில் வைக்க வேண்டும்.
அப்போது ரசம் முறைகட்டி வரும். ரசம் கொதிப்பதற்கு முன் இறக்கவிட வேண்டும். ரசத்தை இறக்கிய உடன் வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் வேக வைத்த மட்டன் சாறையும் சேர்க்க வேண்டும்.
கடைசியாக ஒரு துண்டு வெல்லம் மற்றும் விதை நீக்கிய அறை எலுமிச்சை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் மனக்கும் மதுரை மணப்பட்டி ரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |