அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிறிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குழந்தையின் கையைத் தனதுக் கையில் ஏந்தியவாறு இருக்கும் ஒருப் புகைப்படத்தைப் பகிர்ந்து, இவன் அப்படியே அப்பாவின் கார்பன் காப்பி என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுகின்றது.

இவருக்கும் ஜாய் கிறிஸில்டாவிற்கும் இடையேயான உறவுத் ஆரம்பம் முதல் தற்போது வரையில் பல சர்ச்சைகளை கிளப்பி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்காததன் காரணமாக ஜாய்க்கு ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இவர்களின் வழக்கு இன்னும் முடிவுறாத நிலையில், நேற்றைய தினம் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது குழந்தையின் கையைத் தனதுக் கையில் ஏந்தியவாறு இருக்கும் ஒருப் புகைப்படத்தைப் பகிர்ந்து, இவன் அப்படியே அப்பாவின் கார்பன் காப்பி என பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவின் மூலம், அந்தக் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் மகன் என்பதையும், அவன் அச்சு அசல் தன் தந்தையைப் போலவே இருக்கிறான் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். குழந்தைக்கு 'ராகா ரங்கராஜ்' என்றுப் பெயரிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
