யாரு சாமி இவரு... சர்ச்சைகளுக்கு மத்தியில் துபாயில் மாஸ் காட்டும் மாதம்பட்டி ரங்கராஜ்!
சர்ச்சைகளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் மாதம்பட்டி ரங்கராஜ் துபாயில் பாலைவனத்தில் செம மாஸாக கார் ஓட்டி தற்போது வெளியிட்டுள்ள புதிய காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இருப்பினும் அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ள நிலையில் அவரால், ஏமாற்றப்பட்டு குழந்தைக்கு நியாயம் வேண்டும் என தற்போது வரையில் போராடி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்து தான்.அதனால் ரங்கராஜ் குறித்து பலரும் எதிர்மறை விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

ஆனால் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் மகிழ்சியாக சுற்றி திரிந்து குடும்பத்துடன் புகைப்படங்களையும் வெளியிட்டு ஜாய் கிரிஸில்டாவுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் துபாயில் பாலைவனத்தில் செம மாஸாக கார் ஓட்டி தற்போது வெளியிட்டுள்ள புதிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |