மாநாடு வெற்றி! சிம்புவிடம் காதலை கூறிய கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் ட்விட்டர் பதிவு!
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மாநாடு திரைப்படக்குழுவினர்களும் ஒன்றிணைந்து வீடியொவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்கள்.
மேலும், இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தை ரீமேக் செய்ய தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர் .
இதனிடையே, நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’மாநாடு’ திரைப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த ’மாநாடு’ டீமுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சிம்பு ஒரு ஹார்ட் எமோஜியை பதிவு செய்து நன்றி என தெரிவிக்க, இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் தனது பங்காக ஹார்ட் எமோஜியை பதிவு செய்துள்ளார்,.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் அடுத்து சிம்புவிற்கு பொண்ணு ரெடியாகிச்சா? என கொழுத்திபோட்டும், இருவரும் காதல் வயப்பட சிம்புவிற்கு அடுத்த படத்தில் கீர்த்தியை ஜோடியாக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
Thank you @KeerthyOfficial ??❤️ https://t.co/dTU9dSMMDI
— Silambarasan TR (@SilambarasanTR_) December 2, 2021