‘கிட்ட வந்தா இப்படி அடி... ’ CSK அணி வீரர்களுக்கு MENTORஆக மாறிய தோனி
CSK அணி வீரர்களுக்கு MENTOR ஆக மாறிய தோனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை வந்தடைந்த தோனி
ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில், பயிற்சிக்காக சமீபத்தில் வந்தடைந்தார் தோனி. சென்னை வந்த கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பயிற்சி கற்றுக்கொடுத்த தோனி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், CSK அணி வீரர்களுக்கு தல தோனி பயிற்சி சொல்லிக் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Glimpse of MS Dhoni ??️@MSDhoni #MSDhoni @ChennaiIPL pic.twitter.com/qjcWvAjoy3
— DHONI Era™ ? (@TheDhoniEra) March 9, 2023