Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி
Bigg Boss Munniyamma Luxury Purchases: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முனியம்மா Luxury Purchase செய்த போது 200 கிலோ சிக்கன் எழுதியது குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 19 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
தற்போது 69 நாட்களைக் கடந்த நிலையில், இன்னும் 14 போட்டியாளர்கள் உள்ளதால் இனி வரும் வாரங்களில் இரண்டு நபர்களாக வெளியே அனுப்பலாம் என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி மிட் நைட் எவிக்ஷன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் அவ்வளவாக சுவாரசியம் இல்லாமல் இருந்த நிலையில், அதற்கு குறும்படம் எதுவும் வேண்டாம் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு இருக்கின்றது.

ஆனால் முனியம்மாவின் விளையாட்டு பார்வையாளர்களை சுவாரசியப்படுத்தியிருந்தது. இதற்கு முனியம்மாவை விஜய் சேதுபதி பாராட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முனியம்மாவை வறுத்தெடுத்துள்ளார்.
அதாவது Luxury Task-ல் இந்த வாரம் முனியம்மா பொருட்களை எடுக்க சென்ற நிலையில், தெரியாமல் சிக்கனை 200கிலோ என்று எழுதியுள்ளார்.
எப்பொழுதும் பொருட்களை எடுக்க செல்பவர்களை குற்றப்படுத்தி வந்த முனியம்மா இந்த வாரம் குற்றவாளியாக நிற்க வைத்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சக போட்டியாளர்களிடம் முனியம்மாவின் Purchases குறித்து கேட்கையில் அனைவரும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர். எத்தனை வாரம் பாடம் எடுத்தாலும் இவங்க திருந்தவே மாட்டாங்க என்ற கேள்வியை போட்டியாளர்களிடையே கேட்டுள்ளார்.
இதற்கு ஜேசன் வினோத்தை குறித்தும், அன்சர் ஜேசன் குறித்தும் சரியான கருத்துக்களை வைத்துள்ளார். நாளைய தினம் தீபாவளி கொண்டாட்டம் என்பதால் பிக்பாஸிலிருந்து இன்று போட்டியாளர் வெளியேற்றப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக அஸ்மிதா வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்துக்களை பார்வையாளர்கள் வைத்து வரும் நிலையில், இந்த வாரம் அஸ்மிதா வெளியேற்றப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது. ஆனால் தீபாவளி பண்டிகை இருப்பதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |