கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்த ராசிகளுக்கு பாதிப்பு?
சந்திர கிரகணம் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28 அன்று நிகழவுள்ளது.
இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருந்தாலும், நிலவின் 96.2 சதவீதம் பூமியின் அடர்ந்த நிழலுக்குள் செல்லும் என்பதால், தீவிரமான கிரகணமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி காலை 9:42 மணிக்கு கிரகணம் நிகழ்வதால், இதை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நிகழும் இந்த சந்திர கிரகணம் கும்ப ராசி மற்றும் சதயம் நட்சத்திரத்தில் அமைகிறது.
ஜோதிடத்தின் அடிப்படையில், இந்த கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த கிரகணத்தின் தாக்கத்தை நேரடியாக உணர வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
னதில் அமைதியின்மை நிலவி, முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமம் இருக்கலாம். எனவே எந்த வேலையையும் அவசரப்படாமல் செய்வது நல்லது.
உடல்நிலையிலும் கவனம் தேவை. இந்த நேரத்தில் பேச்சில் கடுமை அதிகரித்து, குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் வார்த்தைகளி்ல் கவம் தேவை.
திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில்லாதவர்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டாலும், முயற்சியை கைவிடாமல் இருப்பது அவசியம்.
சிம்மம்

கும்பம் சிம்ம ராசிக்கு நேர் எதிரான ராசி என்பதால், சிம்ம ராசிக்காரர்கள் உறவுகள், கூட்டாண்மைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கலாம்.
கோபத்தில் முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படலாம். சமூகத்தில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படுவதற்கும், சில எதிர்பாராத சம்பவங்களை சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளது. அலுவலகச் சூழலும் பாதகமாக இருக்கும்.
வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் வருமானப் பற்றாக்குறை ஏற்படலாம். பண இழப்பு ஏற்பட்டாலும், மாத இறுதியில் நிலைமை சீராகும் வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் சில சவால்களை சந்திக்கலாம். புதிய முதலீடுகள் அல்லது நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், அனைத்தையும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; உங்கள் திறமையும் குறைத்து மதிப்பிடப்படலாம். வேலையில் மாற்றம் அல்லது விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்பட நேரிடும்.
வியாபாரத்தில் சரியான திட்டமிடல் அவசியம்; இல்லையெனில் லாப வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். நீண்ட பயணங்களில் பண இழப்பு ஏற்படலாம் அல்லது ஏற்கனவே கடன் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |