சில தினங்களில் சந்திர கிரகணம் 2023: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி யார்?
இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் சந்திர கிரகணத்தினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை குறித்து தற்போது காணலாம்.
சந்திரகிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம். அதாவது, சூரிய ஒளியால் ஏற்படும் பூமியின் நிழலில் சந்திரன் கடந்து செல்லும் நிகழ்வு.
மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில், அறிவியல் ரீதியாக ஏற்படும் இந்நிகழ்வுகளுக்கு ஜோதிட ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
சந்திர கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷம்
மேஷ ராசியினர் இந்த சந்திர கிரகணத்தின் போது பொருளாதார நிலையில் மந்தமாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகவும், பயணத்தின் போது எச்சரிக்கையாகவும், நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் யாரிடம் பேசுவதாக இருந்தாலும் எச்சரிக்கை பேசுங்கள்... அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டீர்கள் என்றால் உறவுகளில் பிளவு ஏற்படும். வேலையில் கூட ஈடுபாடு காட்டால் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, வேலை பறிபோகவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிகாரர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாள்வதில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாகவும், முக்கிய முடிவுகளை சற்று யோசித்து எடுக்கவும்.
கடகம்
கடக ராசியினர் ஆரோக்கியத்தில் பிரச்சினையை சந்திப்பதுடன், வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை... பணியிடத்திலும் பிரச்சினை ஏற்படலாம்... பணத்தினால் ஏமாற்றத்தினை அடைவீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.