சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் ராகு... பேரதிர்ஷ்டத்திற்கு செல்லும் ராசிகள் யார் யார்?
ராகு பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசியினர் நன்மையை பெறுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு கிரகங்களுக்கும் சில ராசிகள் பிடித்தமான ராசியாகவும் இருக்கின்றது.
ஆதலால் இந்த ராசிகளின் கிரக நிலையினால் அதிர்ஷ்டம், செல்வம் என அனைத்தும் கிடைக்கும். ராகு பகவான் மார்ச் இறுதியில் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திற்கு பெயர்ச்சியடைகின்றார்.
இந்நிலையில் ராகு பகவானால் அதிர்ஷ்டம் கிடைக்கும் ராசிகளை இங்கு கீழே காணலாம்.

மேஷம்
ராகுவின் கிரக மாற்றத்தினால் மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட காலமாக இருக்கின்றது. நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் முடிவடைவதுடன், வெற்றியையும் அளிக்கும்.
தொழில் செய்வபவர்களுக்கு பதவி உயர்வும், வணிக தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றது. பல நாட்களாக தடைபட்டிருந்த பணம் இந்த நேரத்தில் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியினர் இந்த மாற்றத்தினால் செல்வம் மற்றும் வீரம் அதிகரிக்கும். தங்களது பேச்சினாலே கொடுத்த வேலையினை புத்திசாலித்தனமாக செய்து முடிப்பதுடன், பொறுப்பில் இருப்பவர்கள் எதிரியை தோற்கடிக்கும் காலமாகவே இருந்தது.
நீண்ட வருடமாக எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தும் முடிவடையும் காலமாக இது இருக்கும் என்று கூறப்படுகின்றது.

கும்பம்
கும்ப ராசியினர் இந்த கிரக மாற்றத்தினால் நன்மைகளை அடைவார்கள். லாட்டரி மூலம் பணம் கிடைக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். குடும்ப சொத்தில் நல்ல பங்கு கிடைப்பதுடன், நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
நிதி நிலையில் நல்ல உயர்வு கிடைப்பதுடன், வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. தாங்கள் எதிர்காலத்தில் செய்யும் தொழிலுக்கு தற்போது முயற்சி எடுத்தால் வெற்றியாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |