அக்டோபர் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 7 ராசியினர்.... உச்சத்தில் இருக்கும் குருவினால் பணமழை
கடக ராசியில் குரு பகவான் உச்சத்தில் இருக்கும் நிலையில் அக்டோபர் மாதம் முழுவதும் ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி
குரு பகவான் (பிருஹஸ்பதி) கடக ராசியில் உச்சத்தில் இருப்பதால் அக்டோபர் 31ம் தேதி வரை சில ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
கடக ராசியில் குருவின் உச்சம், பராசர ஹோரா சாஸ்திரம், பலதீபிய ஆகிய நூல்களின்படி ஞானம், தனம், குடும்ப பாதுகாப்பு, பொருளாதாரத்தில் வளர்ச்சி இவற்றினை பெற முடியும்.
குரு ஆயில்யம் நட்சத்தில் மூன்றாம் பாதத்தில் பயணிப்பதுடன், அக்டோபர் 8ம் தேதிக்கு பின்பு நான்காம் பாதத்திற்கு மாறுகின்றார். இந்த கால கட்டத்தில் ஏழு ராசியினர் பொற்காலத்தினை அடைகின்றனர். அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு குருவின் இந்த பெயர்ச்சியினால் வீடு, நிலம், வாகனம், மன அமைதி அதிகரிப்பதுடன், குடும்ப உறவுகள் வலுப்பெறுமாம்.
நிலுவையில் உள்ள வேலைகள் படிப்படியாக முடிவதுடன், தொழிலிலும் முன்னேற்றம், அந்தஷ்து உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து சொத்து மற்றும் முதலீடு தொடர்பான விடயத்திலும் சுப பலன் கிடைக்குமாம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் செல்வம் அதிகரிப்பதுடன், நீண்ட கால பிரச்சனைகளும் முடிவிற்கு வரும். தொழிலில் சரியான திட்டமிட்டு கவனம் இருந்தால் முன்னேற்றம் மற்றும் பாராட்டு கிடைக்கும்.
பணியிடத்திலும் உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைப்பதுடன், கடன் பிரச்சனை, எதிரிகளால் ஏற்படும் பிரச்சனை, நோய் தொடர்பான அழுத்தமும் குறையுமாம். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் தொழிலில் வளர்ச்சியும் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியினருக்கு குரு பெயர்ச்சியின் காரணமாக உடல்நலம், ஆளுமை வலுப்பெறுவதுடன், தொழில் மற்றும் வேலை இவற்றிலும் முன்னேற்றம் ஏற்படும்.
முடங்கியுள்ள தனம் திரும்ப கிடைப்பதுடன், முன்பு செய்த முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்குமாம். புதிய தொழில் செய்வதற்கு இக்காலம் ஏற்றதாக இருப்பதுடன், ஆன்மீக வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையும் உயரும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் வருமானம் அதிகரிப்பதுடன், அதிக ஆதாயமும் கிடைக்குமாம். சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பதுடன், திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பும், பாராட்டும் கிடைக்கும்.
புதிய பொறுப்பு கிடைப்பதுடன், அதனை திறமையாகவும் நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் கல்வி, படைப்பாற்றல் தொடர்பான விடயத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தனவரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் நல்ல செய்தியும் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு குரு பெயர்ச்சியினால் தொழில் மற்றும் அந்தஸ்தில் உயர்வு கிடைப்பதுடன், பணியிடத்தில் பொறுப்புகளும் அதிகரிக்குமாம்.
வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளிடம் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளதுடன், தனநிலையும் மேம்படுகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதுடன், நீண்ட கால இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.
கர்ம யோகம் வலுப்பெறும். பதவி உயர்வு அல்லது புதிய திட்டங்கள் தொடர்பான வாய்ப்புகள் வரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இந்த குரு பெயர்ச்சியினால் ராஜயோகத்தினை அடைவார்கள். குருவின் ஆசியால் நல்ல திருப்பங்கள் கிடைப்பதுடன், தொழில் மற்றும் தனத்தில் வளர்ச்சி கிடைக்குமாம்.
பயணங்கள் சிறப்பாக அமைவதுடன், ஆன்மீக அணுகுமுறை அதிகரிப்பதுடன், நீண்ட கால விருப்பங்களும் நிறைவேறும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் குழந்தைகளின் கல்வி, படைப்பாற்றல் அதிகரிப்பதுடன், அறிவுத்திறனும் வலுப்பெறுவதுடன், குழந்தைகளுக்கு நன்மை கிடைக்கும்.
முதலீடுகளில் லாபம் கிடைப்பதுடன், தனிப்பட்ட அதிர்ஷ்டம் மற்றும் ஆளுமை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியில் மேம்படுவதுடன், தொழிலில் புதிய யோசனைகள் வெற்றி பெறும். மன அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியும் மேம்படுமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |