குரு அஸ்தமனம்: ராஜயோகத்தை அடையும் 4 ராசியினர் யார் யார்?
குருவின் அஸ்தமனத்தினால் நேர்மறையான ஆற்றலை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு அஸ்தமனம்
ஜோதிடத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த கிரகமாக குரு இருக்கின்றது. செல்வம், அதிர்ஷ்டம், பாராட்டு போன்றவற்றிற்கு காரணமாக குரு இருக்கின்றது.
குருபகவான் தற்போது கடக ராசியில் இருந்துவரும் நிலையில், பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இந்த நேரத்தில் சூரியன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகின்றார்.
குரு மற்றும் சூரியன் நெருங்கி வருவதால் ஜுலை 15ம் தேதி குரு பகவான் அஸ்தமனம் தொடர்கின்றது. இதில் கடக ராசியில் குரு பகவான் அஸ்தமித்து ஆக்ஸ்ட் 9ம் தேதி வரை அங்கே இருப்பார். அஸ்தமன நிலையில் இருந்து வந்து, குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி வரை கடக ராசியில் இருப்பார்.

சிம்மம்
குரு அஸ்தமனத்தினால் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகுவதுடன், குடும்பத்தில் மரியாதை கிடைப்பதுடன், உடன் பிறந்தவர்களின் உதவியும் கிடைக்கும்.
நீண்ட காலமாக பேசாமல் இருந்த உறவுகள் மேம்படும், வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலமாக நல்ல செய்தியினை கேட்பீர்கள்.
கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதுடன், பரம்பரை சொத்து அல்லது பழைய முதலீடுகளில் திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், கடன் பிரச்சனைகள் தீரும். திருமண தடைகளும் நீங்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து கடன் பிரச்சனையிலிருந்து விடுபடும் காலம் இதுவாகும்.
சட்ட ரீதியான போராட்டம், கடன் பிரச்சனை இவற்றிலிருந்து விடுபட இவை சரியான நேரமாகும். மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு சுப பலன்களை அளிப்பதுடன், தொழிலில் உள்ள பிரச்சனைகள் தீர்கின்றது. உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலனையும் பெறுவீர்கள்.
பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதுடன், கூடுதல் பொறுப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவதுடன், வீண் செலவும் குறையும்.
சேமிப்பு அதிகரித்து நிதி நிலைமையும் மேம்படுகின்றது. பழைய முதலீடுகளிலிருந்து எதிர்பாராத லாபத்தினை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களும் உதவி செய்வார்கள். கணவன் மனைவி பிரச்சனை முடிவிற்கு வரும்.

மிதுனம்
மிதுன ராசியினர் சுப பலன்களை பெறுவதுடன், மன அமைதி கிடைக்கும், முடிக்கப்படாத பணிகள் அனைத்தும் முடிவிற்கு வரும். குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.
தொழிலதிபர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இவை சாதகமான இருக்கும். கடன் பிரச்சனைகள் தீர்வதுடன், வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |